சிங்கம்புணரியில் ஆயுத பூஜை விழா! அமைச்சரின் சொந்த நிதியில் 350 ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்கிய திமுகவினர்!

 

  -MMH

   ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தனது சொந்த நிதியிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக சிங்கம்புணரியில் உள்ள அனைத்து வகையான வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் சீருடைகளை வழங்கி வருகிறார். 

அதே போன்று இந்த ஆண்டும் நேற்று மாலை ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் 350 பேருக்கு அண்ணாமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் சீருடைகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலாளர் பூமிநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து மற்றும் சோமசுந்தரம், TAPCMS துணைத்தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், நகர அவைத்தலைவர் காந்திமதி சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், நகர இளைஞரணி அருண் பிரசாத், நகர பொருளாளர் கதிர்வேல், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், தனுஷ்கோடி, நகர இளைஞரணி அருண் பிரசாத், காந்திமதி ஆனந்தகிருஷ்ணன், தங்ககுமரன், அலாவுதீன் யாகூப், ப்ளக்ஸ் துரைசாமி, ராஜாமுகமது, பழனிச்சாமி, சொக்கலிங்கம் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் சார்பில் சிங்கை தருமன், ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 - அப்துல்சலாம்.

Comments