3 மாத பேரனை கொடூரமாக கொலை செய்த விபரீத தாய் கிழவிக்கு வலை!!

 -MMH

மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ஷேக்ஸ்பியர் இவரது மனைவி சாந்தி, இவர்களுடைய மகள் ஐஸ்வர்யா கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு பாஸ்கர் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என்று இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. 

இதைப் பற்றி தகவல் அறிந்த சாந்தி தன் மகள் ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து தன் மகளுடன் நெருக்கமாக இருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா பாஸ்கரன் தம்பதி கோவை கவுண்டம்பாளையம் , சேரன் நகர் பகுதியில் இடம்பெயர்ந்துள்ளனர் இவர்களுடன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள சாந்தியும் உடன் வந்துள்ளார் குழந்தைகளையும் அன்பாக கவனித்து இருந்திருக்கிறார்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஐஸ்வர்யா தன் சகோதரனுடன் மருந்து கடைக்கு சென்று திரும்பிய நிலையில் வீட்டிற்குள் குழந்தைகளைக் காணவில்லை என்று சாந்தியிடம் கேட்டுள்ளார் அதற்கு சாந்தி குழந்தைகளை யாரோ வந்து தூக்கி விட்டு சென்றுவிட்டனர் என்று கூறியிருக்கிறார் இதனால் அதிர்ச்சியில் வீட்டிற்குள் தேடிய பொழுது ஆண் குழந்தை தூங்கிய நிலையில் படுக்கையில் கிடந்திருக்கிறது, பெண் குழந்தையை தேடியபோது கழிவறை குழாயில் துணியை வைத்து அழுத்திய நிலையில் கிடந்திருக்கிறது இந்நிலையில் பெண் குழந்தையை மீட்ட ஐஸ்வர்யா ஆண் குழந்தையை தூக்க சென்ற பொழுது அக்குழந்தையின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு இறந்து கிடந்தது பார்த்து கதறி அழுதுள்ளார் ஐஸ்வர்யா.

 இதற்கிடையில் சாந்தி அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதைபற்றி ஐஸ்வர்யா உடனே தன் கணவர் பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கவே துடியலூர் காவல் நிலையத்தில் இதைப்  பற்றி புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பி சென்ற சாந்தியை பிடிக்க மதுரை விரைந்தனர். 

அங்கு சிறப்பு உதவி ஆய்வாளர் ஷேக்ஸ்பியர் இடம் விசாரணை செய்த பொழுது தன் மனைவி சாந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அடிக்கடி சாந்தியின் மனநிலை மாறக்கூடும் என்றும் மனநிலை மாறிய சூழ்நிலையில் இதுபோல் செய்து இருப்பாரோ என்று  போலீசாரை சமாளித்து வருவதாக தெரிகிறது. ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால் இந்த அளவுக்கு திட்டமிட்டு கொலை செய்து தப்பிக்க முடியுமா மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்த ஐஸ்வர்யாவை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த செயலை செய்து இருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு இரட்டை குழந்தைகளை தாக்கி , அதில் ஒரு குழந்தையை கொலை செய்த சாந்தியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments