பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தையை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்த ஆனைமலை காவல்துறை!! பாராட்டும் பொதுமக்கள்!!

-MMH

பொள்ளாச்சி ஆனைமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில்  தங்கியிருந்த  மணிகண்டன் சங்கீதா தம்பதியின் 5 மாத பெண் குழந்தை மர்ம நபரால் கடத்தப்பட்டது. இதுகுறித்து ஆனைமலை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கண்காணிப்பு கேமரா  பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர் நீலநிற சட்டை,கண்ணாடி அணிந்திருந்த நபர் குழந்தையை கடத்திச் செல்வதை உறுதி செய்தனர் இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன்,கார்த்திக் குமார் மற்றும் போலீசார்   தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சந்தேக அடிப்படையில் ராமர், முருகேசன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையின் விசாரணையில் குழந்தையைக் கடத்தியது இவர்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டது பின்பு குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட காவல்துறையினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையின் விசாரணையில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு கொடுப்பதற்காக கடத்தப்பட்டதாக தெரியவந்தது இதனையடுத்து குழந்தையை வாங்கிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குழந்தையை கடத்தி விற்பனை செய்தார்களா...?

இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா...?

என்ற கோணத்தில் ஆனைமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

M.சுரேஷ்குமார்.

Comments