அதிமுகவின் 50 ஆம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம்..!! அன்னதானம் வழங்கிய எம்எல்ஏ..!!!

 

  -MMH

  தமிழகம் முழுவதும் அதிமுகவினர் 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்வு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இது தொடர்ச்சியாக கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கி பாளையம், சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விமான நிலையம், இடையர்பாளையம், கவுண்டம்பாளையம் இன்னும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா அவர்களின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும், கட்சிக்கொடி ஏற்றியும் , அன்னதானம் வழங்கி  அதிமுகவின் 50ஆம் ஆண்டு பொன்விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. நரசிம்மநாயக்கன் பாளையத்தில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ  பி ஆர் ஜி அருண்குமார் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அண்ணன் அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments