மும்பையின் ப்ளேஆப் கனவையும் தகர்த்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!!

       -MMH

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சாம்சன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. வெங்கடேஷ் அய்யர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 12 ரன்னில் அவுட் ஆனார். பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்த ஷுப்மான் கில் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
ராகுல் திரிபாதி 21 ரன், தினேஷ் கார்த்திக் 14 ரன்கள் (நாட் அவுட்), மார்கன் 13 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ் மோரிஸ், சேட்டன் சகாரியா, ராகுல் தேவாட்டியா, பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே கொல்கத்தா வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியில் ராகுல் டெவாடியா மட்டும் தாக்குப்பிடித்து 44 ரன்னில் வெளியேறினார். கொல்கத்தா சார்பில் ஷிவம் மாலி 4 விக்கெட்டும், பெர்குசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ராஜஸ்தான் ராயல்ஸ் 85 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் 86 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments