ஆழியாறு அணையிலிருந்து 90 நாட்களும் தண்ணீரை வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை!!

  -MMH

    கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை மூலம் 6400 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொள்ளாச்சி சப்-கலெக்டர் உட்பட அதிகாரிகள் தண்ணீரை திறப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது தாங்கள் கோரிக்கை விடுத்த படி 90 நாட்களும் தண்ணீரை வழங்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அதற்கு தமிழக அரசு 80 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அணை நிரம்பி காணப்படுவதால் கோரிக்கைப்படி 90 நாட்கள் தண்ணீரை திறந்துவிட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் அணையில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் எனவும் அவர்கள் போராட்டம்  நடத்தியுள்ளனர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

-சுரேந்தர்.

Comments