ஆயுத பூஜை கொண்டாட்டம்..!!AVP ரெடி மிக்ஸ் கோவை கிளையில் நடைபெற்றது..!!!

 -MMH

கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி இந்து நகரில் AVP ரெடிமிக்ஸ் கான்கிரீட்க்கு சொந்தமான கான்கிரீட் கலவை பிளான்ட் அமைந்துள்ளது. கோவையில் முன்னோடி ரெடிமிக்ஸ் நிறுவனத்தில் ஒன்றாக விளங்கும் AVP கோவை அலுவலகத்தில் கம்பெனியின் சீனியர் மேலாண் இயக்குனர் திரு பிரசன்னா அவர்கள் மேற்பார்வையில் ஆயுத பூஜை விழா நேற்று காலை 7.30 மணி அளவில் நடைபெற்றது. இதில் கோவை களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கம்பெனியின் மேலாண் இயக்குனர் திரு வசந்த், பொது மேலாளர் திரு மயில்சாமி., மேலாளர் பாஷா, திரு குகன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தொழிலாளருக்கு இனிப்புகளும், சன்மானங்கள் வழங்கப்பட்டன. 

சன்மானத்தை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்றுவது தங்களுக்கு திருப்தி அளிப்பதாகவும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

 நாளை வரலாறு செய்திக்காக,

-பாஷா, முகமது சாதிக் அலி.

Comments