குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகன்! .. கண்டித்துள்ள அப்பாவை படுகொலை!!

  -MMH

    மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!
மதுவிற்கு  அடிமையானவரின் வெறிச்செயல்!!

கோவை பீளமேடு நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் ராஜூ என் கிற துரைராஜ் (வயது 73), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (70). இவர்களுடைய மகன் ரவிராஜ் (51). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
ராஜேஷ்வரி பீளமேடு பாரதி காலனியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். ரவிராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததால், அவர் தனது 2 மகன்களை அழைத்து கொண்டு தனியாக சென்று விட்டார். ரவிராஜ் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், ராஜேஸ்வரி வழக்கம் போல், வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தபோது கணவர் துரைராஜ் தலையில் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரைராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் ரவிராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால், தந்தை, மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ரவிராஜ் மது குடிக்க பணம் தருமாறு தந்தை துரைராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ரவிராஜ், தனது தந்தையை சரமாரியாக அடித்து உதைத்து உள்ளார். அப்போது கட்டிலில் இருந்து கீழே விழுந்த துரைராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. 
இதையடுத்து தலைமறைவான ரவிராஜை போலீசார் கைது செய்தனர். மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

- S.ராஜேந்திரன்சுரேந்தர்.

Comments