காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்-கோவை ஆட்சியர்..!!

 

-MMH

   காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2 ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2 ஆம் தேதி ( சனிக்கிழமை) கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுகிறது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் உள்ளிட்ட கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள்,

நட்சத்திர விடுதிகளில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

விதிமுறைகளுக்கு முரணாக மது பானங்கள் விற்பனை செய்பவா்கள் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன். I. அனஸ் இஸ்மாயில்.

Comments