பாரதப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு!! இருசக்கர வாகனத்தில் ஆற்றைக் கடக்க முயன்றவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பரபரப்பு வீடியோ!!

       -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாகஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
இந்நிலையில் ஆழியாறு அணையில் இருந்து அவ்வப்போது உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது இதனால் பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் முத்துசாமிபுதூர் மூலதாரா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை அடுத்து அணையிலிருந்து வெளியேறிய நீரால் சித்தூர்புழா, பரதப்புழா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முத்துசாமிபுதூர் தரை பாலத்திற்கு மேலேயும், சித்தூர் ஆலங்கடவு தரை பாலத்திற்கு மேலேயும் தண்ணீர் அதிகளவில் செல்வதால் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.


வெள்ள அபாய எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்துசாமிபுதூர் தரை பாலத்தை முனியப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் கடக்கும் பொழுது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார் பின்பு அப்பகுதியில் உள்ள பொது மக்களின் உதவியோடு தீயணைப்புத்துறையினர் காப்பாற்றினர்  இதனைத் தொடர்ந்து சித்தூர் ஆலங்கடவு தரைப் பாலத்தை  ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடக்க முற்பட்டபோது அங்கிருந்த பொதுமக்கள் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்  எச்சரிக்கையும் மீறி ஆற்றை கடக்கும் பொழுது நிலைதடுமாறி கீழே விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார் பின்பு ஒரு வழியாக ஆற்றில் மேடான பகுதியில் தட்டுத்தடுமாறி நிலைகொண்ட நபரை பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் உயிர்ப்பலி எதுவும் ஏற்படவில்லை என்றாலும் ஆற்றைக் கடக்கும் பாலங்கள் மிக தாழ்வாக இருப்பதால் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இதே நிலை தான் தொடர்கிறது அவசரத் தேவைகளுக்கு கூட ஆற்றை கடக்க முடியாமல் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி  வருகிறார்கள் இதைக் கருத்தில் கொண்டு கேரளா அரசாங்கம் இவ்விரு தரை பாலத்தையும் உயர்த்தி கட்டித்தர வேண்டும் என இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

-M.சுரேஷ்குமார்.

Comments