அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்! தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்வோருக்கு எச்சரிக்கை !!

 

  -MMH

   கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோம் என்கிற ந்ம்பிக்கையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், நேற்று கும்பல் கும்பலாக மக்கள் மாஸ்க் அணியாமல் ஷாப்பிங்கில் ஈடுபட்டனர்.

கோவையில் முதல் அலையில், தடுப்பூசி இல்லாமல் சிரமப்பட்டோம். அதைத்தொடர்ந்து வந்த இரண்டாம் அலையில், தடுப்பூசி போட்டும் ஆக்ஸிஜன் இல்லாமல் அவஸ்தைக்குள்ளானோம். இவை இரண்டிலும் ஏற்பட்ட உயிர்ப்பலிகளை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அண்டை மாநிலமான கேரளாவில், கடந்தாண்டு ஓணம் பண்டிகைக்குப் பின்னர்தான், மீண்டும் தொற்று அதிகரித்தது.

மாஸ்க் அணியாமல் கூட்டத்தில் பர்ச்சேஸ் செய்வோர், இதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. நமக்கென்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை கடைவீதிகளுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். அழைத்துச்செல்ல நேர்ந்தாலும், நோய் தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி ஆகிய மூன்றையும் ஒவ்வொருவரும் அவசியம் பின்பற்ற வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments