ஒருவரை பழிவாங்க இப்படியெல்லாமா செய்வாங்க ? கைப்பேசியை வைத்து பழி வாங்கிய வஞ்சகம்!

 

-MMH

                  கோவை ஆர்.எஸ்.புரம் சுண்டபாளையம் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 56). இவரது மகளுக்கும், ஐ.டி. ஊழியரான ஜி.என் மில்லை சேர்ந்த மனோஜுக்கும் (36) கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி மீது மனோஜ் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார். மேலும், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மனைவியுடன் மனோஜ் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார்.

அங்கிருந்தபோது மனோஜ் தனது தாய், தந்தை, சகோதரி மற்றும் அவரது கணவருடன் சேர்ந்து தனது மாமியார் குளிப்பதை மறைந்திருந்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடப்போவதாக மாமனார் பாலகிருஷ்ணனை தொடர்ந்து மிரட்டி வந்தார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் ஆர்எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் போலீசார், மனோஜ், தந்தை தர்மராஜ், தாய் கோமதி, சகோதரி சுகன்யா, அவரது கணவர் கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை பழிவாங்குவதற்காக மாமியார் குளிப்பதை  ஐ.டி. ஊழியர் படம் பிடித்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-S.ராஜேந்திரன்.

Comments