காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது !!

 

-MMH

     காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று காந்தி ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தனபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அக்கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி,தகவல் தொழில்நுட்பம் இளைஞரணி, தீரன் தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பிரிவை சார்ந்த பலர் கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை அளித்தனர். இந்நிகழ்ச்சியில்,

இணைச் செயலாளர் ரமேஷ், அவை த்தலைவர் கருப்புசாமி, தலைமை நிலைய செயலாளர் வடிவேல், தீரன் தொழிற்சங்கப் பேரவை மாநிலத் துணைத் தலைவர் அய்யா சாமி, மாவட்ட தலைவர் ஆறுசாமி, இளைஞரணி செயலாளர் பூபதி, மாணவரணி செயலாளர் விஜயகுமார் ,

ஒருங்கிணைந்த மாவட்ட ஐடி விங் செயலாளர் மாவட்ட  செயலாளர் சந்தோஷ், மாநகர செயலாளர் மணிகண்டன்,மகளிர்  அணித் தலைவி சூரியகலா,  கிருஷ்ணவேணி பகுதி செயலாளர் கோமதி, ஐந்தாவது பகுதி செயலாளர் முத்து, நான்காவது பகுதி செயலாளர் மணிவண்ணன் பகுதி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர்  பங்கேற்றனர்.

- சீனி,போத்தனூர்.

Comments