இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை சீரழித்து வரும் போதை மருந்து கலாச்சாரம்! ! காவல்துறையினர் கடும் நடவடிக்கை! !

 

  -MMH

    கோவை சாய்பாபாகாலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடாகம் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்தனர். விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 27) என்பதும், கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்றதும் தெரிந்தது. இதனையடுத்து சாய்பாபா காலனி போலீசார் சூர்யபிரகாசை கைது செய்தனர். 

அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, ஒரு செல்போன், மற்றும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், மேட்டுப்பாளையம் ரோடு ஜீவா நகர் ஜங்சனில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேலாண்டிபாளையம் திலகர் தெருவை சேர்ந்த ஷியாம் ராகுல் (21) என்பவரை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்க வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா, ஒரு செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments