கோவையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்!

  -MMH

  கோவையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்! பலதரப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்! !

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலெக்டர் சமீரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். 

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். காரமடை அருகே உள்ள புத்தர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 1996-ம் வருடம் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை மின்சாரம், குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தவில்லை.

திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஒழுகும் இடத்தில்தான் நாங்கள் தண்ணீரைப் பிடித்து, பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செங்கல் தொழில் மீட்புக்குழுவினர் அளித்த மனுவில், கடந்த மார்ச் மாதம் முதல் செங்கல் உற்பத்தி தொழில் முடக்கப்பட்டு உள்ளது. தற்போது தொழில் இல்லாததால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். 

தொண்டாமுத்தூர், காரமடை, கோவனூர் போன்ற பகுதியில் இயங்கிவரும் செங்கல் சூளைகள் கட்டுமான தொழிலுக்கு மட்டும் செங்கல் சப்ளை செய்து வருகின்றனர். எனவே செங்கல் சூளைகள் முறையான கட்டுப்பாட்டுடன் நடத்த அனுமதி அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருப,ர்

-S.ராஜேந்திரன்.

Comments