சரக்கு ஆட்டோ பைக்கில் மோதி வாலிபர் பலி!!

  -MMH

    கோவை செட்டிபாளையம் அடுத்து ஓரட்டுகுப்பை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் . இவரது நண்பர்கள் மணிவாசகம் மற்றும் கார்த்திக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மூவரும் செட்டிபாளையத்தில் இருந்து ஓரட்டுகுப்பை க்கு ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ பைக் மீது மோதியது இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர் அருகில் இருந்தோர் மற்ற இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments