வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களுக்கான தள்ளுபடி ரசீதை வழங்கினார்!!

 

  -MMH
   திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தும்பலபட்டி ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு. தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களுக்கான தள்ளுபடி ரசீதை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உடுமலை கிழக்கு  ஒன்றிய கழக பொறுப்பாளர் திரு.குப்புச்சாமி அவர்கள்  மற்றும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய கழக பொறுப்பு குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments