பைக், கார் ஷோரூமில் கடத்தல்!! கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள்!!

 -MMH

கோவை சிங்காநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பைக், கார் ஷோரூமில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் நடந்தன.

புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் ஷோரூமில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், நிர்வாண நிலையில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் தெருவை சேர்ந்த பாண்டியன் (42) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், கோவை உள்பட 17 ஊர்களில் உள்ள ஷோரூம்களை கொள்ளையடித்ததையும், உடையணிந்து சென்றால் அடையாளம் தெரியும் என்பதால் நிர்வாணமாக கொள்ளையில் ஈடுபட்டதையும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஷோரூமில் இருந்து வெளியே வந்ததும் நன்றி தெரிவித்து கற்பூரம் ஏற்றி வழிபடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் கூறுகையில், உண்டியல் திருடனாக இருந்த பாண்டியன், திருமணத்திற்கு பின் சமையல் மாஸ்டர் பணியாற்றி வந்துள்ளார். கையில் காயம் ஏற்படவே சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். பழைய வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜராக வந்தவர், ஷோரூம்களில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். ரூ.15 லட்சம் வரை கொள்ளையடித்துள்ளார்.

சென்னையில் சாலையோரத்தில் வசிப்பவர்கள் சாப்பிட காசு இல்லை என கேட்டதால், அனைவருக்கும் தொடர்ந்து 3 நாட்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளார். உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றால் ரூ.5 ஆயிரம் மொய் வைப்பாராம். காது கேட்பதில் பிரச்னை இருந்ததால் மிஷின் வாங்கி பொருத்தியுள்ளார். கொள்ளையடித்த பணத்தை தானம் தர்மம் செய்துள்ளார் என தெரிவித்தனர்.

-சுரேந்தர்.

Comments