ஆனைமலை பெரியபோது அருகே ஆபத்தை ஏற்படுத்தும் அபாய பள்ளம்!!

    -MMH

பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சின்னப்பம்பாளையம், குளத்துப்புதூர் வழியாக பெரியபோது செல்லும் சாலையில் பெரியபோது அருகே உள்ள  பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் வாகன விபத்துக்கள் நடைபெற ஏதுவாக உள்ள நிலையில் இந்தப் பாலம் எப்போது வேண்டுமானாலும் உடையும் என்பது நிதர்சனம்.

அதேசமயம் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து சிறு காயங்களுடன் எழுந்து சென்றதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பெரிய ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு இந்த பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என இப்பகுதி உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments