எரிந்த நிலையில் ஆணின் எலும்புக்கூடு!! காவல்துறையினர் தீவிர விசாரணை! !

 -MMH

கோவையை அடுத்த மதுக்கரை மரப்பாலம் சோதனைச் சாவடி எதிரே தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதன் பேரில்  போலீசார் அங்கு சென்று பார்த்த போது  சில மாதங்கள் ஆன நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு எரிந்த நிலையில் கிடந்தது.  இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு  தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து, அங்குள்ள  தடயங்களை  சேகரித்து ஆய்வு செய்தனர். எலும்பு மாதிரிகளை சேகரித்து மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மனித எலும்புகூடு ஆண் என்று தெரிகிறது. அவருக்கு  25 முதல் 30 வயது இருக்கலாம்.  அவர் யார்? எந்தஊரை சேர்ந்தவர், எரித்து கொலை செய்து வீசப்பட்டாரா?  அப்படி என்றால் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து  பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments