டி.ஐ.ஜி முத்துசாமி சர்ப்ரைஸ் "விசிட்"...!! போலீசார் கடும் அதிர்ச்சி...!!

  -MMH

கோவை சரக ஐ.ஜி சுதாகர்.

   தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போலவே, ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவல் நிலையத்திற்கு திடீர் சர்ப்ரைஸ் "விசிட்" அடித்த கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் பாணியை பின்பற்றி காவல்துறை உயரதிகாரிகள் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு திடீர் விசிட் அடிப்பது தமிழக காவல்துறைக்கு புத்துணர்வை பாய்ச்சியுள்ளது. 

கோவை மண்டல ஐ.ஜி சுதாகர், காவல்துறை அதிகாரிகள் அன்றாட செயல்பாடுகள், புகார்கள், விசாரணை முறை, வழக்குப்பதிவு முறைகேடுகளை கண்காணிக்கும் ரகசிய "ரிமோட்" அணுகுமுறையை கையாண்டுள்ளார்.

கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி.

இதனால் சில விதிவிலக்கு லஞ்ச இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை பாயும் என "விழிபிதுங்கி" நிற்கின்றனர்.

ஐ.ஜி. சுதாகர் வழிகாட்டுதலின்பேரில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி முத்துசாமி, சமீபத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் கருப்பாடுகளை களையெடுத்து வருகிறார்.

கோவை மாநகர கமிஷனர் அலுவலக  வளாகத்தில் இயங்கி வந்த பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த கலையரசி திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இடம் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தபோது செய்த தில்லுமுல்லுகளை விசாரித்த டி.ஐ.ஜி முத்துசாமி, இன்ஸ்பெக்டர் கலையரசியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவல்நிலையத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு.

இதையடுத்து தொண்டாமுத்தூர் காவல் நிலைய எஸ்.ஐ முருகன் செக் மோசடி புகாரில் சிக்கிய நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி அதிரடி காட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்நிலையத்தில் திடீரென புகுந்து ஆய்வு நடத்தி காவல்துறையினரை கேள்விகள் கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

முதலமைச்சரை போலவே ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவல்நிலையத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்தார். அப்போது, குற்ற வழக்குகளை கையாளும் முறைகள், வழக்குப்பதிவு செய்ய தாமதிப்பதால் ஏழைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட எஸ்.பி சசிமோகன், ஏ.எஸ்.பி கவுதம் கோயல், பயிற்சி டி.எஸ்.பிக்கள் மகேஸ்குமார், பிரியதர்சினி நிவேதா லட்சுமி, கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக போலீசார் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை டி.ஐ.ஜி ஏற்றுக் கொண்டார். இதுபோன்ற அதிரடிகள் தொடர்ந்தால் கோவை மண்டல காவல்துறை பளிச்சாகி தூய்மையாகும் என்பது திண்ணம்!!

- பத்திரிகையாளன்,

ஊடகவியலாளன்

-ஆர்.கே.பூபதி.

Comments