கடனை திருப்பி செலுத்தாததால் அக்கா மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்!!

 -MMH

சென்னை: நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாததால் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பா.ஜ.,வின் செயற்குழு உறுப்பினரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று, சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். சில மாதங்கள் கடனுக்கான தவணை கட்டிய மதுவந்தி, அதன்பின்னர் தொடர்ந்து தவணை பணம் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நிதி நிறுவனஅதிகாரிகள் வட்டிப் பணத்துடன் அசலையும் சேர்த்து ஒரு கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாய் பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆனாலும், மதுவந்தி உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனம் சார்பாக மெட்ரோ பாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மதுவந்தியின் வீட்டை சீல் வைக்க உத்தரவு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் தேனாம்பேட்டை எஸ்.ஐ., ரத்தினகுமார், தேவராஜ் , வழக்கறிஞர் வினோத் ஆகியோர் மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். 

அந்த வீட்டின் சாவியை நிதி நிறுவனத்தின் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.வரி காட்டாமல் ஏமாற்றுவதை குடும்பமே தொழிலாக செய்து வருவது குறிப்பிடதக்கது. ஒய்.ஜி.மகேந்திரனின்சகோதரி லதா ரஜினிகாந்த் இதில் முதன்மையானவர் என்பது கூடுதல் சிறப்பு 

-அன்சாரி, நெல்லை.

Comments