குமரி மக்களுக்கு ஆறுதல்!! விஜய் வசந்த் எம்.பி. நெகிழ்ச்சி!!

    -MMH

குமரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு நேரில் சந்தித்து உருக்கத்துடன் ஆய்வு செய்தார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்...!!கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.


இந்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குழித்துறை மார்த்தாண்டம் சுற்றுவட்டார ஊர்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனை அறிந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்  விஜய் வசந்த் அவர்கள் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளுக்கு பயணம் செய்து சேதங்களை பார்வையிட்டார்.


பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு அவர்கள் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் அவர்கள் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார். தொழிலதிபரும் அரசியல் தலைவருமான தமது தந்தையை போலவே விஜய் வசந்த் எம்.பி ஏழை அடித்தட்டு மக்களிடம் நெருங்கி பழகி வருகிறார்.


இந்த எளிமை பண்பு கன்னியாகுமரி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. நடிகராகவும் விஜய் வசந்த் எம்.பி இருப்பதால் தங்கள் இதயங்களில் நாயகனாகவும், தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாகவும் அவரை கொண்டாடி வருகின்றனர். 


இன்னும் இரண்டரை ஆண்டுகளில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் குமரி தொகுதியில் வெற்றி பெறச்செய்து விஜய் வசந்த் எம்.பி.யை மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்தி, அழகு பார்க்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு...!!

-ஊடகவியலாளன், பத்திரிகையாளன்,

-ஆர்.கே.பூபதி.

Comments