அடுத்தடுத்து அதிரடி...!! சபாஸ் வாங்கிய ஐ.ஜி சுதாகர், டி.ஐ.ஜி முத்துசாமி..!!

  -MMH

கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி.

   தமிழக காவல்துறையில் கோவை சரக ஐ.ஜி சுதாகர், டி.ஐ.ஜி முத்துசாமி, எஸ்.பி செல்வநாகரத்தினம் போன்ற அதிகாரிகள் கடமை உணர்வும் பொதுமக்கள் சேவையும் பெரிதும் பாராட்டத்தக்கது.

இவர்கள் சமூக வலைதளமான வாட்ஸ்அப்பை பெரும் குற்றங்களை தடுக்கும் வகையில் ஆரோக்கியமாக பயன்படுத்தி, கடமையாற்றி வருகின்றனர்.

கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் கலையரசி, கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமியின் ஒரே உத்தரவு மூலம் பணியிடை நீக்கம் செய்து தண்டிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் குற்றப்பிரிவு சார்ந்த வழக்குகளில் விதிவிலக்காக ஒரு சில இன்ஸ்பெக்டர்கள் வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பிலும் மிரட்டி பணம் பறிப்பது ஐ.ஜி சுதாகர், டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் நேரடி கவனத்திற்கு ஆதாரங்களுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம்.

இதேபோல நிதி மோசடி, நகை மோசடி போன்ற சில வகை புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், குற்றம் சாட்டப்படும் நபர் தப்பும் வகையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாகவும், சில இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் குற்றம் சாட்டும் நபருக்கு ஆதரவாக செயல்பட்டு, புகார் அளித்தவர் மீதே வழக்குப்பதிந்து அவர்களை அலைக்கழிப்பு செய்வதாகவும், குற்றச்சாட்டுகள் வெளியானது.

மேலும் கோவை பொருளாதார குற்றப்பிரிவு  இன்ஸ்பெக்டர் கலையரசி லஞ்சம் வாங்கிக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமலே தாமதிப்பதாக புகார்கள் குவிந்தது.


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் கலையரசி.

சமீபத்தில் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கலையரசி திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி நேரடியாக களம் இறங்கி நடத்திய விசாரணையில் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பு வகித்தபோது குற்றம் இழைத்துள்ளது தெரிய வந்தது. மோசடி நிறுவனங்கள் குறித்த புகார்களை கலையரசி உடனடியாக விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட கலையரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல, அடுத்தடுத்த அதிரடியாக செக் மோசடி புகாரில் சிக்கிய தொண்டாமுத்தூர் காவல்நிலைய எஸ்.ஐ முருகனை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார், டி.ஐ.ஜி முத்துசாமி ! தமிழக அளவில் முன்னுதாரணமான உத்தரவுகள் இது.

வெல்டன்...கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி சார்...!!"

கோவை சரகத்தில் குற்றம் இழைக்கும் மக்கள் பணியாற்றாத ஒரு சில லஞ்ச இன்ஸ்பெக்டர்கள் மீதும் விரைவில் கோவை சரக ஐ.ஜி சுதாகர், டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் சாட்டையை சுழற்ற தயாராகி வருகின்றனர்.

இதனால் உள்ளூர் அரசியல்வாதிகளிடம் லஞ்சப் பணம் வாங்கிக் கொண்டு, உயரதிகாரிகளுக்கு பொய் தகவலை அளித்து எப்.ஜ.ஆர் போடாமல் மூடி மறைத்து ஏழைகளை விரட்டி அடிக்கும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர். 

அவர்கள் குறித்த தகவல்களை ஆதாரங்களுடன் காவல்துறை உயரதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். நடவடிக்கை விரைவில் பாயலாம்...!!

- செய்தியாளர் ஆர்.கே.பூபதி.

Comments