சிங்கம்புணரியில் கணவன் மனைவியிடையே குடியால் தகராறு! கணவன் தற்கொலை!

-MMH

         திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஆத்திபட்டியைச் சேர்ந்த சேது என்பவரது மகன் கலையரசன்(36). இவர் இவரது மனைவியின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மேல்மலை குடியிருப்புப் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இவர் தினசரி குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அடிக்கடி மிரட்டியும் வந்திருக்கிறார். நேற்று கலையரசன் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்பு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உடனடியாக, சிங்கம்புணரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து சென்ற காவல்துறையினர் கலையரசனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சிங்கம்புணரி தலைமை தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

-ராயல் ஹமீது, அப்துல்சலாம்.

Comments