பி.எஸ்.ஜி கல்லூரியில் விழா...!! டி.ஐ.ஜி முத்துசாமி பங்கேற்பு...!!

 

  -MMH

   கோவை மண்டல காவல்துறை டி.ஐ.ஜி முத்துசாமி.

  கோவையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையில் கோவை மண்டல காவல்துறை டி.ஐ.ஜி முத்துசாமி கையெழுத்திட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கோவை  பீளமேடு பி.எஸ். ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜி டாக்டர்  முத்துசாமி  துவக்கி வைத்து  உறுதி மொழி ஏற்றார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிருந்தா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி செயலாளர் முனைவர் கண்ணையன், துணை முதல்வர் முனைவர் அங்குராஜ் உட்பட பலர்  கலந்து கொண்டனர். முன்னதாக, வரவேற்புரையை  கல்லூரியின் சமூக பணி துறை பேராசிரியர்  முனைவர் ராஜேஷ்வரி வழங்கினார்.

இதில், கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும்  கல்லூரியின் சமூக பணி துறை உதவி பேராசியருமான முனைவர்  ஜெய்லாப்தீன்   நன்றியுரை வழங்கினார்.

சுதந்திர இந்தியா @ 75 ஒருமைப்பாட்டுடன் கூடிய சுயசார்பு என்னும் தலைப்பிட்டு, லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையில் கோவை மண்டல காவல்துறை டி.ஐ.ஜி முத்துசாமி கையெழுத்து இட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பிருந்தா தலைமையில் பேராசிரியர்கள், பேராசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.

-பத்திரிகையாளன்,

ஊடகவியலாளன்

-ஆர்.கே.பூபதி.

Comments