திவான்சாபுதூர் கிராம ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!! அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் அதிக அளவில் குவிப்பு!!

 

  -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் காலியாக உள்ள தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், வடக்கு ஒன்றியத்தில் போளிகவுண்டன்பாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினருக்கும், ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.


இதன் ஒரு பகுதியாக வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர்  கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் திவான்சாபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3, 4, 6, 7, 9 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கியது மக்கள் ஆர்வத்துடன்  வரிசையில் காத்திருந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக, அதிமுக இரு கட்சிகளை தவிர கூட்டணியில் இல்லாத கட்சியினரும், சுயாட்சி வேட்பாளர் என யாரும் இந்த தலைவர் பதவிக்கு போட்டியிட காரணத்தால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த தினங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு கட்சியினருக்கும் வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான இன்று அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

-M.சுரேஷ்குமார்.

Comments