குழந்தைகளுக்கும் தலைக்கவசம்!! - மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிக்கை!!

 

  -MMH

   குழந்தைகளை வைத்து இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இருசக்கர வாகனத்தை செலுத்த வேண்டும் என்று, மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அந்த வரைவு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

"4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது, வாகனத்தை சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கவேண்டும். 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலாக இருசக்கர வாகனத்தை ஓட்டக் கூடாது.

குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும்போது குழந்தைகளுக்கு தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். குழந்தையின் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை வாகன ஓட்டிகள் செய்து கொள்ள வேண்டும்.

குழந்தையை பாதுகாப்பாக பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் வாகனத்தை ஓட்டும் நபர் இணைந்திருக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் எடை குறைவானதாகவும், எளிதில் சரி செய்யக் கூடியதாகவும், நீடித்து உழைக்க கூடியதாகவும், தரமானதாகவும் இருக்கவேண்டும்" என்று அந்த வரைவு அறிக்கையில் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்களின் யோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த திட்டத்துக்கு விரைவு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, அமலுக்கு கொண்டுவரப்படும் வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments