குற்றவாளிகளை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த காவல்துறையினர்!! - பொதுமக்கள் பாராட்டு!!

  -MMH

   வேலூர் பகுதியில் நீண்ட நாட்களாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த காவல்துறையினர் பொதுமக்கள் பாராட்டு. 

வேலூர் மாவட்டம் பொன்னை மற்றும் மேல்பாடி பகுதியில் கடந்த ஒரு வருடமாக பூட்டிய வீடுகளில் நகை பணம் கொள்ளை போவது வாடிக்கையாக இருந்து வந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை பிடிப்பது காவல் துறையினருக்கு மிக பெரிய சவாலாக இருந்து வந்த நிலையில் வேலூர் சரக டிஐஜி A.G.பாபு  வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார்க்கு குற்றவாளிகளை பிடிக்கும் படி உத்திரவிட்டார்.

இதனையடுத்து SP. செல்வகுமார் தலைமையில் தனிப்படை  அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம்  பொன்னை மற்றும் மேல்பாடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொன்னை இன்ஸ்பெக்டர் மனோன் மணி, மேல்பாடி S.I கார்த்தி, தனிப்படை பிரிவு S.I ராமமூர்த்தி அவர்கள் வாகன சோதனையின் போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் போலீசாரை கண்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் வாகனத்தை ஒட்டி சென்றனர்.

உடனே SP. தனிப்படை பிரிவு S.I ராமமூர்த்தி, S.I.கார்த்தி வாகனத்தை சினிமா பாணியில் துரத்தி பிடித்தனர். அவர்கள் பிடித்த அந்த மூன்று பேரையும் விசாரித்த போது அவர்கள் தான் பொன்னை மற்றும் மேல்பாடி ஆந்திரா பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிய வந்தது.

இவர்கள் அதே பொன்னை பகுதியில் மாதா கோயில் தெருவை சேர்ந்த அருண் குமார் (24), வேலு(23), பார்த்திபன் (28) என விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் இவர்கள் பூட்டிய வீட்டில் பணம் ,நகை மற்றும் இரு சக்கர வாகனம், எல் .இ.டி டி.வி போன்ற பொருட்களை கொள்ளையடித்தது தெரிய வந்தது. சுமார் 20 சவரன் நகை மற்றும் 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில் 

மேலும் இரு சக்கர வாகனத்தை எங்கே பதுக்கியுள்ளனர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர் கொள்ளை சம்பவத்தில் பீதி  அடைந்த அப்பகுதி பொதுமக்கள் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உள்ள நிலையில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-P.ரமேஷ்,வேலூர்.

Comments