சிங்கம்புணரி அருகே தனியார் பேருந்தில், இருசக்கர வாகனம் மோதி விபத்து! ஒருவர் படுகாயம்!

 

-MMH

             சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நாடார் பேட்டையை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் லெட்சுமணன் (வயது 45). இவர் நேற்று சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். செல்லியம்பட்டி - வார்ப்பட்டு எல்லையில் உள்ள ஆபத்தான, மிகவும் குறுகலான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பொன்னமராவதியிலிருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு தனியார் பேருந்து வேகமாக வந்துள்ளது. 

 இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய லெட்சுமணன், தனியார் பேருந்தின் பின் சக்கரத்தில் மோதிள்ளார். லெட்சுமணன் தூக்கி வீசப்பட்டு வலது கால் முறிந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர், அவரை மீட்டு பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்த அந்த இடம் பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதா அல்லது எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதா என்ற சந்தேகம் வந்ததில், செல்லியம்பட்டி பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இடம் எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என வரையறுத்துக் கூறினார்.

(மக்கள் விழிப்புணர்வு அமைப்பில் இணைந்து விடுவீர்... உங்கள் உரிமைகளை காத்திட... சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வை இலவசமாக தெரிந்து கொள்ள.... லஞ்சத்தை தவிர்த்து.... ஊழலை ஒழித்துவிட.... இணைவீர் அமைப்பில்... தொடர்புக்கு: 7010082602 9944111882.)

இந்தச் சம்பவம் குறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறுகலான, ஆபத்தான இரு வளைவுகளைக் கொண்ட அந்தச் சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை, நெடுஞ்சாலைதுறையினர் அகலப்படுத்தினால் மட்டுமே தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

-ராயல் ஹமீது, அப்துல்சலாம்.

Comments