திருப்பத்தூர் பகுதியில் கிராமங்களுக்குள் புகும் மலைப்பாம்புகள்! பொதுமக்கள் அச்சம்!

 

-MMH

       சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் கிராமப்பகுதிகளில் கடந்த வாரத்தில் மலைப்பாம்புகள் அதிக அளவில் ஊடுருவின. கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு நாட்டார் மங்கலத்தில் சுப்பிரமணி என்பவர் வீட்டில் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பும், அதனைத்தொடர்ந்து உடைய தாகபுரத்தில் முருகேசன் என்பவருடைய மாட்டுக் கொட்டகையில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பும், நேற்று முன்தினம் கண்டவராயன்பட்டியில் முருகன் என்பவருடைய செங்கல் சூளையில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பும் தீயணைப்புத் துறையினரால் உயிருடன்பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வைக்கோல்போர்களில் கிடைக்கும் கதகதப்பான சூழ்நிலையில் தங்கி இருப்பதற்காகவும் மற்றும் இறைதேடி வரும் காரணத்தினாலும் கிராமப்பகுதிகளில் மலைபாம்புகள் அடிக்கடி ஊடுருவி வருவதாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறியதோடு தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான ஆடு ,கோழி போன்ற பிராணிகளை பாதுகாக்க முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்படும் மலைப்பாம்புகள் அருகாமையில் உள்ள வனபகுதிகளில் கொண்டு போய் விடாமல் தொலைதூரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டுபோய் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மலைப்பாம்புகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லாமல் இருந்து வந்தாலும் அவர்கள் வளர்க்கும் பிராணிகளுக்கு அவ்வப்போது பாதிப்பு ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments

Unknown said…
இதன் காடுகள் அழிப்பும்உள்ளது