மீண்டும் சதம் அடித்தது பெட்ரோல் விலை!!

     -MMH

பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை தினமும் முடிவு செய்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு லிட்டர் பெட்ரோல் 102.49 ரூபாயாக இருந்தது. தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு லிட்டருக்கு 99.47 ரூபாயாக குறைந்தது. தற்போது எண்ணெய் நிறுவனங்கள் சில தினங்களாக பெட்ரோல் விலையை உயர்த்தி வருகின்றன. லிட்டர் பெட்ரோல் 98.90 ரூபாய்க்கும் டீசல் 95.02 ரூபாய்க்கும் விற்பனையாகின. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் விலை ஒன்றரை மாதத்திற்கு பின் மீண்டும் 100 தாண்டியுள்ளது. டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 95.31 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments