மீனாட்சிபுரம் - கோபாலபுரம் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!!

 

  -MMH

   பொள்ளாச்சி தமிழக கேரளா எல்லைப்பகுதியான  மீனாட்சிபுரத்தில் இருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில் பீர் கம்பெனி அடுத்த கைகாட்டி அருகே இன்று காலை  மீனாட்சிபுரத்தில் இருந்து சென்ற கார் ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நபர்களுக்கு  லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் விபத்து குறித்து மீனாட்சிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments