சிங்கம்புணரியில் மது போதையால் கொட்டும் மழையில் விழுந்து ஒருவர் பலி!

-MMH

     சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வி.எஸ்.எஸ் காலனி எதிரில் உள்ள ஒரு மதுபான கடையில் நேற்று காலை முதலே ஒருவர் தொடர்ச்சியாக மது அருந்திக் கொண்டிருந்திருக்கிறார்.

மாலை நேரத்தில் கனமழை ஆரம்பித்த பின்பு அவர் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். அதிக போதையில் நிலை தடுமாறி, நடக்க இயலாமல் மதுபான கடைக்கு வெளியே கீழே விழுந்திருக்கிறார். சுமார் ஒன்பது மணி அளவில் அந்த இடத்தைக் கடந்த சிலர் சிங்கம்புணரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததால், அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது அவர் இறந்திருந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர்,

உடற்கூறு ஆய்வுக்காக அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்பு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் மங்களாபட்டியைச் சேர்ந்த நல்லதம்பி மகன் வீரைய்யா (55) என்பது தெரியவந்தது. கொத்தனார் வேலை செய்து வந்திருக்கிறார். சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் சீராளன் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments