தடையை மீறாதீர்; தண்டனையை பெறாதீர்; எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர் !!

 

-MMH

      மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அமைந்து உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஆழியாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதனால் அணைக்கு எதிரே உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதற்கிடையில் தடுப்பணையில் மூழ்கி பலர் உயிரிழந்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி 2 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஆழியாறு அணை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் தடையை மீறி சென்று குளித்தனர். இதுகுறித்து ஆழியாறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து சுற்றுலா பயணிகளை தடுப்பணையில் இருந்து வெளியேற்றினர். மேலும் தடுப்பணையில் ஆழம் அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகள் ஏற்பட கூடும் என்று எச்சரித்து அனுப்பினர். இதை தொடர்ந்து தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க தடுப்புகளை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-S.ராஜேந்திரன்.

Comments