முத்துசாமிபுதூர் தரைப்பாலம் உடையும் அபாயம்!! தரைப் பாலத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி!!

 -MMH

பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான கோபாலபுரத்தையும் மீனாட்சிபுரத்தையும் இணைக்கும் இணைப்பு சாலையில் முத்துசாமிபுதூர் அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலம் மிகவும் தாழ்வாக இருப்பதால் மழைக்காலங்களில் அதிக நாட்கள் தரை பாலத்திற்கு மேலே தண்ணீர் செல்வதால் இப்பகுதி உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில்  நேற்று மாலை ஆழியாரில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் மூலத்துறை அணைப் பகுதிக்கு நள்ளிரவு வந்தடைந்த நிலையில் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் தரை பாலத்தை மூழ்கி சென்றதால் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட செடிகொடிகள் மற்றும் ஆகாயத்தாமரை உள்ளிட்டவை தரைத்தளத்தில் உள்ள சிறிய தடுப்பு களில் மலைபோல் குவிந்து கிடைக்கிறது.

இதனால், தரைப்பாலம் சேதமடைந்து சிறிய தடுப்புகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் இவ் வழித்தடத்தை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகளும்  பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செடி கொடிகளை அப்புறப்படுத்தி சீரான பயணத்தை உறுதி செய்திட வேண்டும் என இப்பகுதி உள்ள சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கையாக முன் வைக்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தரை பாலத்தை உயர்த்த கட்டி தர  வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

-M.சுரேஷ்குமார்.

Comments