உன்னைப்போல் ஒருவன் இருந்தால் ..!! மக்களால் பாராட்டப்படும் திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ்..!!

 

  -MMH

    மக்கள் தேவையறிந்து பணியாற்றும் திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள். அப்படி என்னதான் செய்தார் இவர்? ஆமாங்க மக்களோடு மக்களாய் கலந்து எங்களின் தேவைகளை அறிந்து எங்கள் குறைகளை சரிசெய்து வைக்கின்ற ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் அண்ணன் செல்வராஜ் அவர்கள். 

அரசாங்க சான்றிதழ் எதுவாயினும் இவரை அணுகினால் உண்மை தன்மையை அறிந்து சான்றிதழ்களை தன் சொந்த செலவிலேயே எங்களிடம் வந்து கொண்டு சேர்த்து விடுகிறார் என்று சொல்லும் அவரால் பயன் பெற்ற ஒருவரின் இந்த பதிவு நம் மனதை நெகிழ வைக்கின்றது. 

கட்சி பகுதி பொறுப்பாளர்களை வாரம் ஒருமுறை சந்தித்து அந்தப் பகுதியில் உள்ள குறைகளை கேட்டிருக்கிறார் செல்வராஜ். பத்தாண்டுகளில் தீர்க்கப்படாத பிரச்சனையை பத்தே நாட்களில் தீர்த்து வைத்த தீர்க்கதரிசி இவர். திருப்பூர் காலேஜ் ரோட்டில் மக்களுக்கு இடையூறாக செயல்பட்டுவந்த மதுக்கடையை அகற்ற சொல்லி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்து ஓய்ந்தனர். அந்த மனு செல்வராஜ் அவர்களிடம் சென்றது  பத்தே நாட்களில் கடை அகற்றப்பட்டது என்ன ஆச்சரியம்!!  மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மனம் இருந்தால் போதும் என்ற இந்த செயல் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இவரின் நன்மதிப்பை கூட்டியுள்ளது. இது போன்ற எண்ணற்ற சேவைகளைச் செய்து கொண்டிருக்கும் செல்வராஜ் அவர்களின் பணி சிறக்க மக்களில் ஒருவராக நம்மளும் அவரை வாழ்த்துவோம். அடுத்த கோரிக்கையாக இதேபோல் புஷ்பா தியேட்டர் சிக்னல்  அருகாமையில் மக்களுக்கு இடையூறாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுக்கடையை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதன் தீர்வை எதிர்பார்த்து உள்ளவர்களில்  நாமும் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாட்ஷா, திருப்பூர்,

Comments