நைலான் கயிற்றால் தம்பியை கொன்ற அண்ணன் கைது!!

 

  -MMH

   கோவை உக்கடம் எஸ்.எச். காலனியை சேர்ந்தவர் செல்வராஜ்(40). இவர் இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தார். திருமணம் ஆகாத இவர் தினமும் மது போதையில் தனது குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். 

சம்பவத்தன்று இவரது அண்ணன் சுப்பிரமணி(52) அதே பகுதியில் வசித்து வருகிறார். அவரிடம் செல்வராஜ் மது போதையில் அண்ணன் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தார் இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி அவரை சரமாரியாக தாக்கி உள்ளார் பின் நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். 

சுப்பிரமணி செல்வராஜ் மதுபோதையில் கீழே விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கழுத்தில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவத்தை நேரில் சென்று விசாரித்த போலீசார் சடலத்தை கைப்பற்றி சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments