அரசாணைக்கு எதிராக மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டால் கடும் நடவடிக்கை !!

 

-MMH

    சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது அரசு கல்விக்கட்டணம் இம்மாணவர்களுக்கு வழங்கும் வரை அவர்களிடம் கல்விக் கட்டணம் செலுத்தும்படி வலியுறுத்தக் கூடாது என்று கல்லூரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது இந்த அரசாணைக்கு எதிராக கல்விக்கட்டணம் செலுத்துமாறு மாணவர்களை நிர்பந்தம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் எச்சரித்துள்ளார் மேலும் இதுபோன்ற புகார்களுக்கு மாணவர்கள் 0422 2303778  இந்த நம்பருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments