பசூர் ஊராட்சிக்கான இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம்..!!! திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார களத்தில் இறங்கிய திரு பையா கவுண்டர்..!!!

    -MMH

   தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட  உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான  அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவிநாசி  உட்பட்ட 3வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு போட்டியிடும் பசூர் ஊராட்சி திமுக வேட்பாளர் திருஇ.ஆனந்த் அவர்களை ஆதரித்து நேற்று கோவை மாவட்ட மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் அவர்கள் வேட்பாளரை ஆதரித்து இறுதிகட்ட அனல்பறக்கும்  பிரச்சாரத்தில் களமிறங்கினார். அவர் வீடு வீடாக சென்று திமுக அரசின்  சாதனைகளை, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முதல்வர் அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை பற்றி பரப்புரை யாற்றி வாக்குகளை சேகரித்தார். திரு பையா கவுண்டர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் அமோகமான வரவேற்பு தந்தது மட்டுமல்லாமல் திமுக கட்சிக்கே தங்களின் ஆதரவு  என்றும் நம்பிக்கை அளித்தனர். 

இதை பற்றி திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், தங்களுக்கே வெற்றி பிரகாசமாக உள்ளதாகவும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார் அது மட்டுமின்றி கோவை மேற்கு மண்டல பொறுப்பாளர் திரு பையா கவுண்டர் அவர்களின் களப்பணியை புகழ்ந்தவர். எங்கள் அண்ணன் மிக எளிமையானவர் மக்களோடு மக்களாய் இருந்து சேவை அற்ற கூடியவுர் அவர் களத்தில் இறங்கினால 'மாஸ்' தாங்க என்று புகழாரம் சூட்டினார்.இதில் பகுதி பொறுப்பாளர்கள் மதிப்பிற்குரிய திரு பொன்னுசாமி, திரு. சிரவை சிவா, திரு. அருள்குமார் மற்றும் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வட்ட கழக செயலாளர்கள் மாவட்ட பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

-சாதிக் அலி.

Comments