சிங்கம்புணரி அருகே, பிரான்மலையில் மதுபோதையால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு! மனைவி தற்கொலை!

 

-MMH

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை மதகுபட்டியில் வசித்து வருபவர் பிடாரன். அவரது மனைவி கோகிலா (வயது27). 

இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

பிடாரன் தினசரி குடித்துவிட்டு வந்து  மனைவியுடன் தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2 ம் தேதியன்றும் பிடாரன் குடித்துவிட்டு வந்து வழக்கம்போல் வீட்டில் தகராறு செய்துள்ளார். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த கோகிலா, இதன் விளைவாக கடையில் எலிபேஸ்ட்டை வாங்கித் தின்று மயங்கி விழுந்துள்ளார்.

 இதைக் கவனித்த அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக  மேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிகிச்சை பலனின்றி கோகிலா நேற்று உயிரிழந்தார். கோகிலாவின் சடலத்தை பிரான்மலை கொண்டு வந்த அவரது உறவினர்கள், காவல்துறைக்குத் தெரிவிக்காமல் எரிக்க முயற்சி செய்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர், கோகிலாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதக் பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

-ராயல்ஹமீது, அப்துல்சலாம்.

Comments