வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி..!! நகை பணம் சிக்காததால் கொள்ளையர்கள் அட்டூழியம்..!!

 

   -MMH

    சேரன்மாநகர் அருகே உள்ள காஞ்சி மாநகர் பகுதியில் நேற்று பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வீட்டில் நகை பணம் எதுவும் சிக்காத தினால் கொள்ளையர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து போட்டுவிட்டு குப்பைகளை கொட்டி விட்டு ஓடிவிட்டனர்.  காஞ்சி மாநகர் பகுதியில் குடியிருப்பவர் பத்மநாபன் ( வயது 50 ) இவர் மூன்று மாத காலமாக புனேவில்  தங்கியுள்ளார். இவரது மனைவி மட்டும் இங்கே குடியிருந்து உள்ளார் இவரும் ஒரு வாரத்திற்கு முன்பு புனே சென்றுவிட்டார்  பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று இரவு அந்த வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளார். வீட்டிற்குள்  நகை பணம் மற்றும் வேறு கொள்ளையடிக்கும் அளவுக்கு எந்த பொருளும் கிடைக்காத நாள் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த டிவி மற்றும் இதர சாமான்கள் வீட்டுக்கு வெளியே போட்டு இந்த இடத்தில் குப்பைகளை கொட்டி மேலே முழுவதும் தண்ணீரை ஊற்றி விட்டு அட்டூழியம் செய்து சென்றுவிட்டனர். இதை காலையில் அறிந்த அக்கம் பக்கத்தினர் பத்மநாபனுக்கு தகவல் தெரிவித்து மட்டுமல்லாமல் பிளமேடு காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் பக்கத்து வீட்டிலிருக்கும் சிசிடிவி  கேமராக்களின்  பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சேரன்மாநகர் சுற்றியுள்ள பகுதியில் அடிக்கடி நடக்கும் இதுபோன்ற திருட்டு சம்பவத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

-முகமது சாதிக் அலி.

Comments