வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடை களை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் !!

 

-MMH

       கோவையில் தடாகம் சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, உள்ளிட்ட சாலைகளிலும், பெரியக்கடை வீதி, உக்கடம், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கால்நடைகள் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.  இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே சாலையில் கால்நடைகள் சுற்றுவதை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்த நிலையில்  கோவை பெரியக்கடைவீதி, டி.கே. மார்க்கெட் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது வாகன ஓட்டிகள் சிலர் அந்த மாடுகளை விரட்ட முயன்றனர். அப்போது மாடுகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடியதாகவும் கூறப் படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகராட்சி அதிகாரி கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

பின்னர் ஊழியர்கள் அங்கு சுற்றிய 10 மாடுகளை பிடித்து வாகனங் களில் ஏற்றினார்கள். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கோவையில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிய 10 மாடுகள் பிடிக்கப்பட்டு அவை கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் பரா மரிக்கப்பட்டு வருகிறது.

 அத்துடன் அந்த மாடுகளின் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று கால்நடைகளை சாலையில் திரியவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் S.

-ராஜேந்திரன்.  

Comments