சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்!!

  -MMH

  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி.கலாநிதி வரவேற்புரையாற்றினார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் உறுப்பினர் இராஜேஸ்வரி  எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய சைல்டுலைன் உறுப்பினர் கார்த்திகேயன், பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வும் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், மேலும் வளரிளம் பருவத்தில் பெண் குழந்தைகள் வாழ்வில் தடம் புரளாமல் குறைந்தபட்சம் பட்டப்படிப்பாவது பயில வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர், முடிவில் பள்ளி உதவித்தலைமை  ஆசிரியை தேன்மொழி நன்றியுரையாற்றினார்.

- அப்துல் சலாம்.

Comments