உங்கள் துறையில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் காவல் துறையினருக்கு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது !!

 

-MMH

      தமிழக டி.ஜி.பி.யின் உத்தரவின்படி, கோவை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு "உங்கள் துறையில் முதல்-அமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ் நேற்று கோவை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. 

காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 4 மாவட்டங்களை சேர்ந்த 138 போலீசார் கலந்துகொண்டு, தங்களது பணி மாறுதல் மற்றும் பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமியிடம் நேரில் சமர்ப்பித்தனர். 

அந்த மனுக்கள் மீது அந்த இடத்திலேயே பரிசீலிக்கப்பட்டு தகுதியின்படி குறைகளை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கருத்துருக்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற குறைதீர்ப்பு கூட்டங்கள் தங்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வந்த போலீசார் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments