தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!

 

  -MMH

   தீபாவளி பண்டியையை ரயிலில் முன்பதிவு முடிந்துவிட்டதால் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று நவம்பர் ஒன்றாம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில் சேவை நாடு முழுவதும் நிறுத்தப்பட்டது. தொற்று குறையத் தொடங்கிய பின்னர் மீண்டும் ரயில் சேவை இயக்கப்பட்டது. எனினும், இதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. முன்பதிவு இல்லா பெட்டிகளுக்கு பதிலாக அனைத்து பெட்டிகளிலும் முன்பதிவு செய்து பயணிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்பதிவு இல்லா பெட்டிகளுக்கு பதிலாக முன்பதிவு செய்து அமர்ந்து செல்லும் வகைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டது. மேலும், தீபாவளி பண்டிகை வருவதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். ரயில்களில் இதற்கான முன்பதிவு முடிந்துவிட்டது.

பேருந்துகளில் கட்டணம் அதிகம் மற்றும் வசதிகள் குறைவு என்பதால் ரயில் பயணத்தையே பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர். எனவே, மீண்டும் முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 23 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , திருவனந்தபுரம்-திருச்சி-திருவனந்தபுரம் (நான்கு பெட்டிகள்), கோட்டயம்-நிலம்பூர் சாலை-கோட்டயம் (ஐந்து), திருவனந்தபுரம்-எர்ணாகுளம்-திருவனந்தபுரம் (நான்கு), திருவனந்தபுரம்-ஷோரனூர்- திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் (ஆறு), கண்ணூர்-ஆலப்புழா-கண்ணூர் (ஆறு), ராமேஸ்வரம்- திருச்சி-ராமேஸ்வரம் (நான்கு), எர்ணாகுளம்-கண்ணூர்-எர்ணாகுளம் (ஆறு), டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-ஜோலப்பேட்டை-மத்திய (ஆறு), பாலக்காடு டவுன்-திருச்சி-பாலக்காடு டவுன் (ஆறு), கண்ணூர்-கோவை-கண்ணூர் (நான்கு), மற்றும் திருவனந்தபுரம்-குருவாயூர்-திருவனந்தபுரம் (நான்கு). நாகர்கோவில்-கோட்டயம் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத 5 பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மங்களூர்-கோவை-மங்களூரு (நான்கு), நாகர்கோவில்-கோவை-நாகர்கோவில் (நான்கு) ஆகிய ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை நவம்பர் 10ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே அனுமதித்துள்ளது.

-Lnஇந்திராதேவி முருகேசன். /  சோலை ஜெய்க்குமார்

Comments