கோவையில் காந்தி ஜெயந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது !

 

-MMH

     கோவையில் காந்தி ஜெயந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு  ஏழை எளிய மக்களுக்கு பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜகவினர் நாடு முழுவதும் பல்வேறு நலத் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காந்தி ஜெயந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை  கொண்டாடும் விதமாக பாஜக ஆர்எஸ் புரம் மண்டல் சார்பில் சொக்கம்புதூரில் உள்ள 77வது வார்டு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் மரம் நடும் விழா மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.


ஆர்எஸ் புரம் மண்டல் தலைவர் ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் மற்றும் அகில இந்திய இளைஞர் அணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுக்கு பாஜகவினர்  உணவளித்தனர்.  இந்நிகழ்ச்சியின் போது பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments