ராமகிருஷ்ண மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்களை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் !!

 

-MMH

                    கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்களை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், ரிப்பன் வெட்டி துவங்கி வைத்துள்ளார். கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில்,  செயல்பட்டு வருகின்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிர்காக்கும் உபகரணங்களை, தமிழக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்   ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்,  பாஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலமாக, நோயாளிகளுக்கான மானிட்டர், வென்டிலேட்டர், சரிஞ்ச்பம்ப், என்ஐவி வென்டிலேட்டர்கள், நிறுவப்பட்டுள்ளது. 

இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா, சுப்பிரமணியம், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்தையும் துவக்கிவைத்து நோயாளிகளின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிகழ்ச்சியில் எஸ் என் ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சுகுமாரன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், பாஸ் நிருவன கார் மல்டிமீடியா பொது மேலாளர் ஷைஜூ, மற்றும் அறம் அறக்கட்டளை நிறுவனர் லதாசுந்தரம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும்  கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments