இரண்டு பெண்களிடம் உல்லாசம்.. பின்னர் கொலை செய்து வாய்க்காலில் வீசிய கொடூரம்...!!!

 

  -MMH

   திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு பிறகு அவர்களை கொலை செய்து காட்டில் வீசிய கொடூரம். 

இந்த வெறிச் செயலை செய்த நபரை பற்றிய போலீஸ் விசாரணை:

மடத்துக்குளம் நாட்டுக்கல்பாளையம் என்ற பகுதி வாய்க்காலில் இருந்து 2 பெண்கள் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த கணியூர் காவல்துறையினர் இரண்டு பெண் பிரேதத்தை யும் சோதனை செய்ததில் அவர்களின் அடையாளங்களை வைத்து துப்புத் துலக்கிய  போலீசாருக்கு  ஒரு பெண் 45 வயது மதிக்கத்தக்க நாகராஜின் மனைவி கோகிலவாணி என்று தெரியவந்தது மற்றும் ஒரு பெண் உடுமலை எஸ்வி புரத்தைச் சேர்ந்த முத்தையா கீர்த்தனா ( வயது 40 ) மேலும் இவர்கள் இருவரும் தோழிகள் என்றும் சம்பவத்தன்று கோகிலவாணி வீட்டிற்கு கீர்த்தனா ஒரு ஒரு வாலிபரை அழைத்து சென்று மூவரும் உல்லாசத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர் பின்னர் ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபர் இரண்டு பெண்களையும் அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு பின்னர் அவர்களை கொலை செய்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சினிமாவில் நடக்கும் திகில் மர்மக் கொலைகள் போல் அரங்கேறியுள்ளது இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-பாட்ஷா,திருப்பூர்.

Comments