சோமாலியாவை நெருங்கும் இந்தியா! உலக பட்டினி தரவரிசையில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளத்தை விட கீழ் நிலையில்!

 

-MMH

                உலகம் முழுவதும் மக்கள் பட்டினியால் வாடும் நாடுகள் குறித்த தரவரிசையில் இந்தியா 101வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டை விட, பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் (Global Hunger Index) இந்தியா பின்தங்கியுள்ளது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்தக் குறியீட்டு அறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் சுமார் 15.3% பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் கொரோனா, பொருளாதார பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் பல நாடுகளில் பட்டினி, வறுமை அதிகரித்துள்ளது. இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னரான பொருளாதார சூழல்களாலும் வறுமை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உலகளவில் அதிகம் பட்டினி ஏற்பட்டுள்ள நாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் பட்டினி குறைவாக உள்ள நாடுகள் முதலில் இடம்பெறும். அடுத்தடுத்து பட்டினி அதிகமுள்ள நாடுகள் இடம்பெறும். உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இந்த தரவரிசையில் 116 நாடுகள் உள்ள நிலையில், இந்தியா 101வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 94வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது மேலும் சரிந்துள்ளது. மேலும் பட்டினி மிகவும் அதிகமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது. 116வது இடத்தில் சோமாலியா உள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 92வது இடத்திலும், நேபாளம் மற்றும் வங்கதேசம் 76வது இடத்திலும் உள்ளன.

-பாரூக்.

Comments